TNPSC Daily Current Affairs 2 September 2018

0
130
TNPSC Daily Current Affairs 2018
Advertisement

Read TNPSC and Bank Exams or Competitive Examinations – Daily Current Affairs 2 September 2018

ஆசிய விளையாட்டு போட்டிகள்

Advertisement

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

நிறைவு விழாவில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்கிறார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய Moving on.. Moving Forward : A Year in Office என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

பாங்காங்கில் டிசம்பரில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் 2018 போட்டியில் பங்கேற்க மும்பைப்பெண் நேஹல் சூதாசமா இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமண மதத் துறவி தருண் சாகர் மஹாராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மத்திய பிரதேச மாநிலம் தோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சாகர் மஹாராஜ். இவரது இயற்பெயர் பவன் குமார் ஜெயின்.

செப்டம்பர் 10-ம் தேதியில் இருந்து டெல்லி மாநிலத்தில் வாழும் மக்களுக்கு 100 சேவைகள் வீட்டுக்கே வந்து தரப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கேரளா வெள்ளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை மறுகட்டமைக்கும் பணிக்கு திட்ட ஆலோசகராக KPMG என்ற நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தை அம்மாநில அரசு தேர்வு செய்துள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த சேவையை இலவசமாக செய்து தருவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சஞ்சய் தத்

உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் போதை பொருள் ஒழிப்பு தூதுவராக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நியமிக்கப்படவுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 2013ம் ஆண்டு பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு ஒன்று அமைந்தது. அப்போது பணியில் இருந்த நீதிபதிகள் ஜியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய இருவரை கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதன்பிறகு முற்றிலும் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு அமையவில்லை.

இந்த நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இந்த அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. நீதிபதிகள் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பெண் நீதிபதிகள் அமர்வு ஒன்று செப்டம்பர் 5ந்தேதி வழக்குகளை விசாரிக்கிறது.

இவர்கள் இருவரையும் தவிர நீதிபதி இந்து மல்கோத்ராவும் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் முதல்முறையாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தாஹிரா சப்தார் எனும் பெண் நீதிபதி பதவியேற்றுள்ளார்.

இவர் பலுசிஸ்தான் மாகண உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

அறிவியல்

விண்வெளியை பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய உலகின் அதி நவீன தொலைநோக்கி சிலி நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த #ஜெயன்ட்_மெக்கல்லன்_டெலஸ்கோப், வருகிற 2024ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் விசாரனை

ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வசீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அவர் தலைமை பொறுப்பேற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து மேகாலய மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

பிம்ஸ்டெக் மாநாடு 2018

வங்கக் கடலையொட்டி அமைந்துள்ள 7 நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் அமைப்பின் வரும் ஓராண்டுக்கான தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது.

வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிம்ஸ்டெக் மாநாடு, இந்த அமைப்பிற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் நாட்டில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தலைமை வகித்த நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 4-வது பிம்ஸ்டெக் மாநாடு நடந்து முடிந்தது.

இதைதொடர்ந்து, வரும் ஓராண்டுக்கான தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது, நேபாள பிரதமர் சர்மா ஓலி முறைப்படி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் பிம்ஸ்டெக் அமைப்பில் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். அதன்படி 5-வது பிம்ஸ்டெக் மாநாடு அடுத்த அண்டு இலங்கையில் நடைபெற உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு குடியரசு தலைவரிடம் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பரிந்துரை செய்துள்ளார்.

முதல் பெண் விமானி

காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் பெண் இராம் ஹபீப் முதன் முறையாக விமானி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here