How to Register PICME and RCH ID to get Birth Certificate

RCH ID என்றால் என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்பத்தை 12 வாரத்திற்குள் அருகிலுள்ள நகர / கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார செவிலியர்களிடம் பதிவு செய்து RCH ID பெற்றுக் கொள்ளவும். பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு RCH ID அவசியம்.

RCH ID பெறுவதற்கு தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:

  • தங்களது ஆதார் மற்றும் கணவரது ஆதார் நகல்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருப்பின் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் கீழ் பண உதவி பெறுவதற்கு தேசியமாக்கப்பட்ட வங்கியில் தங்கள் வைத்துள்ள வங்கிக்கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும்.
  • மேலும் RCH ID பெறுவதற்கு 102 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு Pre-registration (முன் பதிவு) செய்து கொள்ளலாம்.
  • கிராம / நகர ஆரம்ப சுகாதார நிலயங்களிலும் முன்பதிவு செய்து RCH ID பெற்று கொள்ளலாம்.
  • தாங்களாகவே https://picme.tn.gov.in/picme_public/ என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

RCH ID தொடர்பான சந்தேகங்கள் /தகவல்கள்

RCH ID இல்லாமல் பிறப்பு சான்றிதழ் பெற இயலுமா?

இயலாது. RCH ID இருந்தால் மட்டுமே பிறப்பு சான்றிதழ் பெற முடியும்.

RCH ID எங்கு பெற்று கொள்ளலாம்?

கர்ப்பிணி பெண் கற்பதை உறுதி செய்து கணவரது முகவரியில் தங்கியிருந்தாலோ அல்லது குறைத்தது ஆறு மாத காலம் வேலைநிமிர்த்தம் / பிரகாரணங்களினால் வேறு நிலையான முகவரியில் தங்கியிருந்தாலோ அப்பகுதியிலேயே உள்ள நகர / கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார செவிலியர்களிடம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

RCH ID எப்பொழுது பெற வேண்டும்?

கர்ப்பிணிப்பெண் RCH IDஐ 12 வார கர்ப்பக்காலத்திற்குள் அருகில் உள்ள உள்ள நகர / கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார செவிலியர்களிடம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

RCH ID பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

கர்ப்பிணிப் பெண்ணின் ஆதார் எண் மற்றும் கணவரின் ஆதார் எண் ஆகியவற்றை சுகாதார செவிலியரிடம் கொடுக்க வேண்டும்.

முன்பதிவு (Pre-Registration) என்பது என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் https://picme.tn.gov.in/picme_public/ என்ற இணையத்தளத்தில் முலமாக அரசு இ சேவை மையம் மூலமாகவோ, 102 என்ற சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையம் மூலமாகவோ தங்களது கர்ப்ப விபரத்தை பதிவு செய்யும் முறையாகும்.

முன்பதிவு செய்த உடனே RCH ID கிடைக்குமா?

கர்ப்பிணிப் பெண்கள் முன்பதிவு செய்த நகர / கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார செவிலியர்கள் அவரது கர்பத்தினை உறுதி செய்து தேவையான விபரங்களை பெற்று கர்ப்பத்தை பதிவு செய்து குறைந்து 7 நாட்களுக்குள் RCH ID வழங்குவார்கள்.

In English:

How to register RCH ID and get Birth Certificate from PICME?

Pregnant women can register their pregnancies within 12 weeks with the health nurses of the nearest urban/rural primary health centre and obtain an RCH ID to Get Birth Certificate.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top